இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்.!

273

இராமநாதபுரத்தின் தோப்பு வலசை கடற்கரை பகுதியில் வாகனம் ஒன்றில் வந்த சிலர் பொதிகளை இறக்கி வைத்து விட்டு சென்றிருப்பதாக இன்று (20) அதிகாலை தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக தோப்புவலசை கடற்கரை பகுதியில் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

குறித்த பொதிகளில் 116 கிலோகிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.