பாடசாலை மாணவி மீது துஸ்பிரயோகம் – மூன்று சிறுவர்கள் கைது!

114

கினிகத்தேனை பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பல தடவைகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று சந்தேக நபர்களும் 2026 ஜனவரி 18 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, 2026 பெப்ரவரி 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி, கினிகத்தேனை – கோணவல பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும் அவரை சந்திக்கச் சென்ற சந்தர்ப்பங்களில், குறித்த நபர் தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு காதலனும் அவரது நண்பர்களும் இணைந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாணவி தனது பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறி இரவு தாமதமாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து, சந்தேகமடைந்த பாட்டி கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மாணவி பல தடவைகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் கீழ்.

மாணவி நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் 16 முதல் 17 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்கள் எனவும் அவர்கள் மீது மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.