கவிஞர் தீபச்செல்வனின் “நினைவில் நாடுள்ளவன்” நூல் வெளியீடு!

119

தமிழ்த்தேசிய கலை இலக்கியப் பேரவை மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கவிஞர் தீபச்செல்வனின் “நினைவில் நாடுள்ளவன்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.ரகுராம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமாகிய சிவஞானம் சிறீதரன் மற்றும் ஐ.பி.சி மற்றும் ரீச்சா குழுமத்தின் நிறுவுனர் திரு கந்தையா பாஸ்கரன், சகோதர மொழி எழுத்தாளர் திருமதி திலினா வீரசிங்க கிளிநொச்சி மாவட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.