மொபைல் போன் கடத்தல் முயற்சி தோல்வி : பிடிபட்ட தொழிலதிபர்.!!

185

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அனுமதியில்லாமல் ரூ.34 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 390 தொலைபேசிகளை கடத்த முயன்றவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடையைச் சேர்ந்த 45 வயதுடைய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் நேற்று (18) காலை 7.00 மணியளவில் டுபாயில் இருந்து இலங்கை எயார்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் நாட்டிற்கு வந்துள்ளார். இதன்போது இவர் மூன்று பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த 397 தொலைபேசிகளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.