யாழில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் : முற்றுகையிடப்பட்ட டிப்பர் வாகனம்.!

183

யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிப்பருடன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இந்த கைது நடவடிக்கை நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் சட்டவிரோதமாக நீண்ட காலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த டிப்பர் ஒன்றினையே மருதங்கேணி காவல்துறையினர் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (12) அதிகாலை குறித்த இடத்தை திடீரென மருதங்கேணி காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

இதையடுத்து, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிக்கொண்டு சென்றகொண்டிருந்த டிப்பருடன் சாரதியை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதி டிப்பருடன் மருதங்கேணி காவல்நிலையத்தில் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.