யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்…!

178

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (11) இடம்பெற்றுள்ளது. அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய விசேட சோதனையின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து ஐந்து கிறாம் மற்றும் 39 மில்லி கிறாம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.