யாழில் ரயில் மோதி விபத்து – படுகாயமடைந்த 23 வயது இளைஞன் உயிரிழப்பு

190

யாழில் ரயில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 23 வயது இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற ரயில் விபத்தில் தீவிரமாக காயமடைந்த இளைஞர் இன்று (11) உயிரிழந்துள்ளார்.

முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சிவராஜா சிவலக்சன் என்ற இளைஞனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.