கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை முயன்ற நபர் கைது!!

109

சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“கிரீன் ரோடு” வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிகரெட்டுகளை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொண்டு வந்த பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36,45,000 ரூபாய் மதிப்புள்ள 20,700 வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் குருநாகல், மாவதகமவில் வசிக்கும் 29 வயதுடைய தொழிலதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.