தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய முயற்சி – மட்டக்குளியில் நால்வர் கைது

94

மட்டக்குளி தொழிலதிபரை கொலை செய்ய முயன்ற நால்வர் கைது!

மட்டக்குளி – கதீரானவத்தைப் பாலம் அருகே தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்ட நால்வரை போலீஸ் நேற்று (10) கைது செய்துள்ளனர்.

கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் மற்றும் 06 உயிர்க்குண்டுகளுடன் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரை கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

மேலும் குற்றச்செயலுக்கு ஆதரவும் உதவியும் செய்ததாக சந்தேகிக்கப்படும் இன்னும் இரண்டு பேரும் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெடல – வத்தளை பகுதி சார்ந்த அந்தோணி சார்லஸ் எனப்படும் தொழிலதிபரை கொலை செய்யும் நோக்கில் இவர்கள் வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரிவால்வர் பயன்படுத்திய நபர் ஹொரணையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் என்றும், மற்ற மூன்று சந்தேக நபர்கள் களனியா மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.