மடூல்சீமை செல்லும் பிரதான வீதி – தடைப்பட்டுள்ளது.

80

பசறையில் இருந்து மடூல்சீமை செல்லும் பிரதான வீதியில் பசறை கிகிரிவத்தை 2 ம் கட்டை பகுதியில் வீதி தாழிறங்கியமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்து அவ்விடத்தில் தடைப்பட்டுள்ளது.

 

குறித்த வீதியானது பசறையில் இருந்து மடூல்சீமை ஊடாக எக்கிரிய மற்றும் பிட்டமாறுவ செல்லும் பிரதான வீதியாகும்.

 

இருப்பினும் குறித்த வீதியினூடான போக்குவரத்து அவ்விடத்தில் தடைப்பட்டுள்ளமையினால் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பசறை மடூல்சீமை வீதியில் 2 ம் கட்டை பகுதியில் இறக்கப்பட்டு அவ்விடத்தில் இருந்து நடைபயணமாக சென்று மறுபக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்துகளில் ஏறி செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது.

 

மேலும் உந்துருளிகள், முச்சக்கர வண்டிகள் என்பன அவ்வீதியினூடாக பயணிக்கின்றன. மேலும் வீதியை சரிசெய்து போக்குவரத்திற்கு வழியமைக்கும் நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.