வடக்கில் கடல் பாதுகாப்பு குறித்து இலங்கை–நியூசிலாந்து பேச்சுவார்த்தை

31

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத குடியேற்றம், கடல் எல்லைப் பாதுகாப்பு, மனிதக் கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இலங்கை கடற்படையும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலய அதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பு வடக்கு கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் ஒழுங்கற்ற குடியேற்றத் தொடர்பு அதிகாரி சோன்யா டக்ளஸ், வடக்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தனவைச் சந்தித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் நிலவும் ஒழுங்கற்ற குடியேற்றப் போக்குகள் மற்றும் கடல் எல்லைப் பாதுகாப்புச் சவால்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மனிதக் கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்களைத் தடுப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்பில் புதிய ஒப்பந்தம் அல்லது குறிப்பிட்ட செயற்திட்டம் அறிவிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.