கொழும்பில் மசாஜ் நிலையத்தில் 4 தாய்லாந்து பெண்கள் கைது.!!

56

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரைன் டிரைவ் பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த சட்டவிரோத விடுதி ஒன்றை நேற்று பொலிஸார் சோதனையிட்டனர்.

வெள்ளவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 35 முதல் 43 வயதுக்குட்பட்ட 4 தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பில் மசாஜ் நிலையத்தில் 4 தாய்லாந்து பெண்கள் கைது | Massage Parlor Wellawatte Raided

மேலும், இந்த நிலையத்தை நிர்வகித்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.