அம்பலாங்கொடையில் மண்மேடு சரிந்து விபத்து.!!

84

அம்பலாங்கொடை, கரித்தகந்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றின் அடித்தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் மண்ணுக்குள் புதையுண்ட மூன்று தொழிலாளர்களில் இருவர் மீட்கப்பட்டு, பலப்பிட்டிய ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மற்றைய தொழிலாளர் தொடர்ந்து மண்ணுக்குள் சிக்கியுள்ள நிலையில், அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.