ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

92

கல்வி சீர்திருத்தப் பிழைகள் – ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

கையொப்பங்களை  சேகரிக்கிறது எதிர்கட்சி.


தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த கல்வி சீர்திருத்தங்களில் மாணவர்களின் மனநிலைக்கு பொருத்தமற்ற பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன என்றும், பாடஅலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகள் வெளிப்பட்டுள்ளன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கும் நடவடிக்கைகளை  ஆரம்பிக்கிறது எதிர்கட்சி.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கையொப்பங்களை இட்டனர். கல்வி துறையில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் பிழைகள் தொடர்பாக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதே இந்த பிரேரணையின் முக்கிய காரணமாக எதிர்க்கட்சி வாதிடுகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையாக பிரேரணை எப்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்பதற்கான விவரங்களும் விரைவில்  வெளியாகும் என கூறப்படுகிறது.