மட்டக்களப்பில் தொடரும் மழைவீழ்ச்சி – வெள்ளத்தில் மூழ்கிய தாழ்நிலப்பிரதேசங்கள்.!!

138

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் மட்டக்களப்பில் கடலை அண்மித்துள்ள பிரதேசங்களில் கடற்றொழிலாள்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடல் கொந்தளிப்பு காரணமாக அவர்கள் தங்களது வாழ்வாதார பொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துவதை காண முடிகின்றது.

கடல் பலத்த இரைச்சலுடன் கொந்தளிப்புடன் காணப்படுகின்றதனால் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த காற்று வீசி வருவதை அவதானிக்க முடிகின்றது.