தகாத தொடர்பால் கர்ப்பிணிப் பெண் சுட்டுக் கொலை.!!

114

தென்னிலங்கையின் பத்தேகம – ஹல்பேதொட்ட பகுதியில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான நீண்டகால மோதலும் பழிவாங்கும் நடவடிக்கையும் இருப்பதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மீது ரி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தகாத தொடர்பால் கர்ப்பிணிப் பெண் சுட்டுக் கொலை; வெளிவரும் பகீர் தகவல்! | Baddegama Shooting Pregnant Woman Killed

பொலிஸாரின் விசாரணைகளின்படி, கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண், லொக்கு பெட்டி எனப்படும் பாதாள உலகக் குழுத் தலைவருடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் நீண்டகால சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலையாகியிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி வந்துள்ளார்.

அவ்வாறு முன்னிலையாகிவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கரந்தெனிய சுத்தா மற்றும் லொக்கு பெட்டி தரப்பினருக்கு இடையிலான நீண்டகால மோதலே இந்தக் கொலைக்கான பின்னணியாக இருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் கரந்தெனிய சுத்தாவின் மைத்துனர் லொக்கு பெட்டி தரப்பினரால் கொல்லப்பட்டதாகவும், அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.