பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு : பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!!

128

பத்தேகம – ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது இன்று (27) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கார் ஒன்றில் வந்த நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பெண்களும், ஒரு ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மற்றைய பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு : பெண் உட்பட இருவர் உயிரிழப்பு | Baddegama Shooting Two Including Woman Killed

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.