முன்னாள் யாழ்.மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரனுக்கு என்ன நடந்தது?

53

முன்னாள் யாழ்.மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று புதன்கிழமை (02.09.2026) இரவு பதிவிட்டுள்ள முகநூல் பதிவு தற்போது பலரதும் கவனத்தை திருப்பியுள்ளது.

என்னுடைய உந்துருளிக்கு வயசு 26. இன்னும் அதன் உறுமலுக்கு குறைவில்லை. ஆனாலும் கடந்தவாரம் ஓடுவதும் நிறபதுமாக இடைவழியில் முக்கித்தக்கி குளறுபடி செய்யத் தொடங்கியது. திருத்துனரிடம் பெருமையாகச் சொன்னேன். இதற்கு முன் ஒருபோதும் இடைவழியில் நின்றது கிடையாது என்று. சிரித்தபடியே பதில் வந்தது 26 வருசமா காபிறேற்றர் அடைக்காமல் இருக்குமா?கடந்த சில மாதங்களாக மீளவும் இதய நோவு தலைகாட்டத் தொடங்கியது. இருதய நாடிக் குழாய்கள் மீளவும் அடைத்துக் கொண்டன. பைபாஸ் செய்தும் பிரயோசனம் இல்லையோ?

12 வருசம் பிழையில்லாமல் ஓடிச்சுதே எண்டு சந்தோசப்படுங்கள் என்றார் பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்தவர்! எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவர் சுகவீனமுற்ற நிலையிலிருக்கும் ஒளிப் படமொன்றையும் அவர் பகிர்ந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.