பெண்கள் , குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்த இளைஞன்.!!

69

பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க நிழற்படங்களை பகிர்ந்த பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை பெலியத்தை பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே சம்பவத்தில் கைதாகியுள்ளார்.

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் காவல்துறை அதிகாரிகள் குழுவினர், பெலியத்தை (Beliatta) பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேகநபரின் கைப்பேசி பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.