வீடு கட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி.!!

75

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த நபரொருவர் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மோசடி செய்த தொகை இரண்டுரை கோடி ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மூலம் வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறி சந்தேகநபர் இந்த மோசடியைச் செய்துள்ளார்.

அவர் வீடுகளுக்கான பணத்தை தவணை முறையில் செலுத்த முடியும் எனக் கூறி இந்த மோசடியை செய்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அவருக்கு எதிராக 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.