தெஹிவளை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரி கைது!

87

தெஹிவளை, கடவத்தை வீதிப் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் அத்துருகிரிய, ஹபரக்கட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இச்சந்தேபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.