சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்…

56

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளரும் புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார, எதிர்வரும் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் கீழ் இரண்டு பதவிகளுக்கான வேதனம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.