ரூ.153 கோடி லாட்டரி வெற்றி.., ஒரே மணி நேரத்தில் ஏழையான பெண்.

78

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.153 கோடி லாட்டரி பரிசு கிடைத்தும், அதை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸில் வசிக்கும் கீத் மெயின் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.

ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கலில், கீத் வாங்கிய சீட்டுக்கு 12 மில்லியன் பவுண்டுகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.153 கோடி ஆகும்.

லாட்டரியில் வெற்றி பெற்றதை அறிந்த கீத், உடனடியாக தனது தாயிடம் தெரிவித்தார்.

கீத்தின் தாய், அந்த லாட்டரி சீட்டை இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பார்த்தபோது எந்தவிதமான எச்சரிக்கை ஒலியும் வரவில்லை.

அந்த சீட்டு வெற்றி பெற்றதாக தெரியவில்லை என நினைத்து, அதை லாட்டரி மையத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசிவிட்டார்.

இதையடுத்து, கீத் உடனடியாக லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, வெற்றி பெற்ற சீட்டு தங்களிடம் இருந்ததாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அந்த லாட்டரி சீட்டு கிடைக்காததால் ரூ.153 கோடி பரிசை வென்றும், அதை பெற முடியாமல் கீத் தவித்து வருகிறார்.

இந்நிலையில், லாட்டரி நிறுவனம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்காக 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டதை தொடர்ந்து கீத் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.