பதவியை துறந்துவிட்டு முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்ற நகரபிதா!

135

பலாங்கொடை நகரசபை தலைவர் கே.ஜீ. பேமதாச ராஜினாமா.

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரசபை தலைவர் கே.ஜீ. பேமதாச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது தனிப்பட்ட தேவைகளின் காரணமாக பதவி விலகுவதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அறிவிப்பு வழங்கிய சில நிமிடங்களிலேயே, அவர் முச்சக்கர வண்டியில் ஏறிச் செல்வது அங்கிருந்தவர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

பலாங்கொடை நகரசபை இதுவரை தேசிய மக்கள் சக்தி (NPP) கட்டுப்பாட்டில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.