2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு

90

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு சட்டமூலத்தின் நாடாளுமன்ற விவாதங்கள் தொடர்பான அட்டவணையை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (பாதீட்டு உரை) நவம்பர் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20 வரையிலும், குழு நிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரையிலும் நடைபெறும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.