கல்லடி பாலத்திற்கு அருகில் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற நபரால் பரபரப்பு.!!

173

மட்டக்களப்பு – கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே வெட்டி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த ஆண் ஒருவரை பொதுமக்கள் பொலிஸாருடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று(10.07.2026) பகல் 11.30 மணிக்கு குறித்த சம்பவம் இடம்பெற்றதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பாலத்தில் சம்பவ தினமான இன்று பகலில் திடீரென வீதியில் வந்த ஆண் ஒருவர் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றிவிட்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்ததையடுத்து வீதியால் வந்த பொதுமக்கள் பொலிஸார் இணைந்து குறித்த நபரை மீட்டு ம்ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா தாளையடித் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய மகேந்திரன் அருள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மட்டடக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.