கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: காவல்துறை விசாரணை.!!

80

அம்பாறை – கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சில குறைபாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, கல்முனை மாநகர சபை பதில் ஆணையாளர் நூர்தீன் முகம்மட் நௌபீஸ் நேற்று ஆராய்ந்துள்ளார்.

இதன்போது, கடமைக்குச் சமூகமளித்திருந்த ஊழியர் ஒருவர், தனக்குரிய கடமைகளை முறையாக செய்யவில்லை என்ற விடயத்தை பதில் ஆணையாளர் கண்டறிந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக குறித்த ஊழியரை பதில் ஆணையாளர் கேள்விக்குட்படுத்தியபோது, அவர் ஆணையாளரை அச்சுறுத்தும் விதமாக நடந்துக் கொண்டதாக காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சூரியன் செய்திப் பிரிவு கல்முனை காவல்நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு வினவியபோது, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் இன்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.