காட்டுப்பாதையில் வீதி அமைக்க முடியாது : முள்ளிக்குளம் குறித்து வெளியான அதிரடி விளக்கம்!

64

முள்ளிக்குளம் பகுதிக்கான பாதயாத்திரை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் உள்ளதால், குறித்த காட்டுப்பாதையில் வீதிகளை அமைக்க முடியாது என அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், பாதயாத்திரைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அவதானத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தற்போது ஆரம்பமாகியுள்ள கதிர்காம பாதயாத்திரைக்காக காட்டுப்பாதை திறக்கப்பட்டுள்ளதுடன், யாத்திரிகர்களுக்குத் தேவையான வசதிகள் பிரதேச சபைகள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.