நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!

92

பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டில் பணம் மற்றும் வைரம் திருடப்பட்டுள்ளதாகக் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து ரூ. 3 இலட்சம் ரொக்கப் பணம் மற்றும் வைரம் (டைமண்ட்) செயின் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, நடிகரின் மேனேஜர் நீலாங்கரை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வீட்டில் பணிபுரியும் 2 சாரதிகள், ஒரு பி.ஏ (P.A), ஒரு பணிப்பெண் மற்றும் அவரது மகன் மீது சந்தேகம் இருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை நீலாங்கரை காவல்துறை முன்னெடுத்து வருகிறது.