சட்டவிரோத மது அருந்திய ஐவர் உயிரிழப்பு; வென்னப்புவவில் சம்பவம்!

168

வென்னப்புவ – மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகம்: 5 பேர் உயிரிழப்பு

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்னப்புவ – மாரவில பகுதியில், சட்டவிரோத மதுபானம் அருந்தியதன் காரணமாக உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் சடலங்கள் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

அதே சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நிலையில், கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் இரண்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், உயிரிழப்புகளுக்கான துல்லியமான காரணம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானப் பயன்பாடு காரணமாக ஏற்படும் உயிராபத்துகள் தொடர்பில் பொதுமக்கள் அதீத அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.