அதிரடி சதம் விளாசிய லஹிரு உதார! 338 ஓட்டங்களுடன் இலங்கை முன்னிலை.!

92

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 5 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

அன்டிகுவாவில் ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார மிகச்சிறப்பான அடித்தளமிட்டு, 188 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

இவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய கமிந்து மென்டிஸ் 84 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷமர் ஜோசப் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஜேடன் சீல்ஸ், அல்சாரி ஜோசப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்றைய முதலாம் நாள் ஆட்டமுடிவின் போது, இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.