கணவர் தாக்கியதில் 29 வயது பெண் உயிரிழப்பு.!!

119

பொலன்னறுவை அரலகன்வில, பிம்பொகுண பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், தாக்குதலுக்கு உள்ளான பின்னர் அரலகன்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தசம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ளதாகக் கருதப்படும் பெண்ணின் கணவரான சந்தேகநபரைத் தேடி தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.