சுவிட்சர்லாந்து தூதுவர் இலங்கை பிரதமருடன் இறுதி சந்திப்பு.!

85

தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ள சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

சிறி வோல்ட், இலங்கையின் சுவிட்சர்லாந்து தூதுவராக கடந்த 2024ஆம் ஆண்டில் தனது பதவிக்காலத்தை ஆரம்பித்திருந்தார்.

இலங்கையிலான தனது இராஜதந்திரப் பணிகளின் போது, இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர் வழங்கிய பங்களிப்பிற்காக பிரதமர் இந்த சந்திப்பின் போது தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.