துப்பாக்கி, வாள்கள் மற்றும் ரவைகளுடன் பெண் ஒருவர் கைது.!

102

கந்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நடத்திய திடீர் சோதனையின் போது, உரிமமற்ற பெருங்குழல் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வாள்களுடன் 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 53 வயதுடைய சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காகக் கந்தானை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.