ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அழிப்பேரலை அபாயம்?

154

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இவாட்டே மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால் இன்று (28) அதிகாலை 5:21 மணியளவில் 6.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது.

சுமார் 40 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால், அருகிலுள்ள ஆமோரி மற்றும் இவாட்டே மாகாணங்களின் சில பகுதிகளில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டன.

எனினும், இந்த நிலநடுக்கத்தினால் அழிப்பேரலை ஆபத்து ஏதுமில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஜப்பானின் இப்பகுதியில் நிலநடுக்கங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது .

கடந்த வியாழக்கிழமை (25) இப்பகுதியில் 7.2 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்திற்குப் பலத்த நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் இந்த அனர்த்தம் எற்பட்டுள்ளது ..

தற்போதைய நிலையில், இந்த நிலநடுக்கத்தினால் உயிர்ச்சேதங்களோ அல்லது பெரிய அளவிலான பாதிப்புகளோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இப்பகுதியில் நிலவும் காலநிலை மற்றும் தொடர்ந்து பெய்யும் மழையினால் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.