வவுனியா – வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித் தடை.!

84

வவுனியா மாவட்டத்தின் வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த திருமதி சுலோஜினி குகன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் பணித் தடை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு நடவடிக்கை தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் இலஞ்சச் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இதனையடுத்து, பொதுச்சேவைகள் ஆணைக்குழுவானது அவரை பணியில் இருந்து இடைநிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.