செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணியில் மேலும் 08 என்புக் கூட்டு தொகுதிகள் மீட்பு.!

56

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், இரண்டு சிறுவர்களுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் என்புக் கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தம் 08 என்புக் கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் குறித்த இடத்தில் இதுவரை மீட்கப்பட்ட என்புக் கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான மேலதிக ஆய்வுகள் மற்றும் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நிபுணர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதுடன், இந்தக் கண்டுபிடிப்புகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.