1 வயதும் 8 மாதமுமா குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு – மூதூரில் சம்பவம்

108

1 வயது 8 மாத பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு.

மூதூர் ஷாபி நகர் பகுதியில் துயரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 1 வயது 8 மாதங்கள் வயதுடைய ஆலியா என்ற பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று (5) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. குழந்தை வீட்டை அண்மித்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கவனயீனமாக நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நீர் நிலைகள் மற்றும் பள்ளங்கள் போன்ற அபாயகரமான பகுதிகளுக்கு அருகில் சிறு குழந்தைகள் இருக்கும் போது பெற்றோர்களும் பாதுகாவலர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்த துயர சம்பவம் வலியுறுத்துகிறது.