பிரதேச சபைத் தலைவரின் கையொப்பத்தை பயன்படுத்தி மோசடி.

31

நுவரெலிய பிரதேச சபையின் தலைவரின் கையொப்பம் மோசடியாக பயன்படுத்தப்பட்டு பதினொரு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 07ம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வுப் பிரிவினரால் நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த காலப்பகுதியில் ஏப்ரல் 7ஆம் தேதி போலியாகப் போடப்பட்ட தனது கையொப்பத்தைப் பயன்படுத்தி, பிரதேச சபையின் பதினொரு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக நுவரெலிய பிரதேச சபையின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது கையொப்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ஆறு இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்து, நுவரெலிய குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நுவரெலிய உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் நேற்று (02) எழுத்துப்பூர்வமாகப் முறைப்பாடு அளித்துள்ளார்.

சம்பளம் வழங்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வைக்குப் பிறகே தனது கையொப்பம் சட்டப்படி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் அதிகாரிகள் கையொப்பமிடுவதற்கு முந்தைய திகதியில் தனது கையொப்பம் போலியான முறையில் இடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும், தான் பிரதேச சமுறைப்படி விசாரணைபையில் இல்லாத காலகட்டத்தில் தனது கையொப்பமாகப் பயன்படுத்தப்பட்ட போலிக் கையொப்பத்தை ஏற்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

போலிக் கையொப்பங்களைப் பயன்படுத்தி சம்பளம் வழங்கப்பட்டதாகவும், கையொப்பத்தைப் போலியாகப் போட்டு மோசடியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் தாம் சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், இவ்விடயம் குறித்து முறைப்படி விசாரணை நடத்தி சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நுவரெலியா பொலிஸ் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.