மீண்டும் ஒரு அதிர்ச்சி – 15 வயது சிறுமிக்கு தேரர் செய்த கொடூரம்..!

42

கண்டி பகிரவகந்த பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பணியாற்றும் 25 வயதுடைய பௌத்த தேரர் ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கண்டி பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளில் வெளிவந்துள்ள மிக அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், கைது செய்யப்பட்டுள்ள இந்த தேரர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் சொந்த சகோதரர் (சித்தப்பா/பெரியப்பா) ஆவார்! புனிதமான ஆடைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு, சொந்த இரத்தத்திற்கே இந்த துரோகத்தை இழைத்த சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர குற்றத்திற்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில், பகிரவகந்தையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்..

தேரரின் நிலை – கடந்த மே 21 அன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேரரை, ஜூன் 1 ஆம் திகதியான இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பெண்ணின் நிலை – குற்றத்திற்கு துணையாக இருந்த பெண் சந்தேக நபர், தலா ரூபா 200,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்காக உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரின் பலத்த பாதுகாப்பில் உள்ளார். இச்சம்பவம் குறித்து கண்டி தலைமையக பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.