கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஆறு தேசிய விருதுகளை வென்று சாதனை! 

48

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஒரே தடவையில் ஆறு தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (16.05.2026) கொழும்பில் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் நடித்த விளைநிலம் நாடகம் சிறந்த நாடக கதைக்காகத் தேசிய ரீதியில் முதலாமிடத்தையும், சிறந்த நாடகத் தயாரிப்புக்காகத் தேசிய ரீதியில் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் சிறந்த நடிகன், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகன், சிறந்த இசையமைப்பு என மொத்தமாக ஆறு தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.