யாழ். இந்துக் கல்லூரியின் 19 வயதுப் பிரிவுத் துடுப்பாட்ட அணி வரலாற்றில் முதற் தடவையாக இறுதிப் போட்டியில் இணை சம்பியனாகத் தெரிவு!

101

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 19 வயதுப்பிரிவு துடுப்பாட்ட அணி வரலாற்றில் முதற் தடவையாக Division-3 இறுதிப் போட்டியில் இணை சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம்- 13, 14 ஆம் திகதிகளில் கண்டி சுமங்கல வித்தியாலயத்துடன் கொழும்பில் MAC மைதானத்தில் நடைபெறவிருந்த இறுதிப் போட்டி தொடர் மழை காரணமாக வெற்றிக் கிண்ணம் இரு அணிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துவின் துடுப்பாட்ட அணிகளுக்கான முழுமையான அனுசரணையை Cricket Development Council – UK வழங்கி வருகிறது. இலங்கையில் 15, 17 வயதுப் பிரிவு துடுப்பாட்ட அணிகள் Division-1 இலும், 19 வயதுப் பிரிவுத் துடுப்பாட்ட அணி Division- 2 இலும் காணப்படும் ஒரேயொரு தமிழ்ப் பாடசாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாத்திரமே என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.