யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது.!

121

யாழில் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05) யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 29 மற்றும் 32 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இருவரும் நான்கு கிராம் 90 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பிரதிக் காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.