உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேரில் ஆய்வு.

75

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள் மற்றும் குறைபாடுகளை நேரில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் இன்று (12.05.2026) வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது வைத்தியசாலையின் அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, நோயாளர்களுக்கான சேவைகள் மற்றும் பணியாளர் தேவைகள் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்க தேவையான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், குறுகிய காலத்திற்குள் தேவைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.