கழுத்து வெட்டப்பட்ட தலை ஒன்று சிலை ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.!!

124

இலங்கையின் அம்பலாங்கொடை – போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை கொலை செய்வதற்காக மூவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவரை கொலை செய்த பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியில் உள்ள ஒரு சிலைக்கு அடியில் வைத்து விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.