தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரம்.

104

தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரம் ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு; முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கிவைப்பு

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரம் 12.05.2026இன்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது குறித்த மக்கள் தொடர்பகத்தில் கறுப்பு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்வாரம் நினைவுகூரப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நினைவுகூரல் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா கலந்துகொண்டிருந்ததுடன், பெருந்திரளான பொதுமக்களும் உணர்வுபூர்வமாகப் பங்கேற்றிருந்தனர்.