வைரல் ரீல்ஸ் வீடியோவால் சிக்கிய நான்கு பெண்கள்.!!

99

சமூக வலைதளங்களில் வைரலான ரீல்ஸ் வீடியோ ஒன்றைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் புத்தளம் பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் மூன்று இளம் பெண்கள் தலைக்கவசம் அணியாமல், ஆபத்தான முறையில் அதிவேகமாகப் பயணித்த காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, புத்தளம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். வீடியோ ஆதாரங்களை பயன்படுத்தி மூன்று பெண்களையும் அடையாளம் கண்ட பொலிஸார், அவர்களுக்கு உதவியாக வீடியோ பதிவு செய்த மற்றொரு பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போக்குவரத்து விதிகளை மீறியமை, கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக வலைதள புகழுக்காக ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.