காலி தங்கெதர பகுதியில் துப்பாக்கிச் சூடு: 44 வயது நபர் உயிரிழப்பு.!!

80

காலி தங்கெதர பகுதியில் இன்று காலை (11.05.2026) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலை சுமார் 7.30 மணியளவில் டிக்ஸன் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த அவரை இலக்கு வைத்து, சொகுசு காரில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உடனடியாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பல வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகற்பொழுதில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதல்தாரிகளை அடையாளம் காணவும், சம்பவத்தின் பின்னணி குறித்து தெளிவுபடுத்தவும் காலி பொலிஸார் CCTV காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.