களுத்துறை கடற்கரையில் ஆசிரியை சடலமாக மீட்பு.!!

85

களுத்துறை தெற்கு கலீடோ கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், பண்டாரகம வீதியகொட பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆசிரியை நதீஷானி தரங்கிகா அமரநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தாயார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது சடலம் மே 1 அன்று கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மே 2 அன்று களுத்துறை நாகொட மருத்துவமனையில் கணவரும் தாயாரும் அடையாளம் கண்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குடும்பப் பிரச்சினை காரணமாக இவர் ஏப்ரல் 30 இரவு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான துல்லியமான காரணம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், அதன் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்படுகின்றன.