கனடாவில் கடுமையாக்கப்படும் சட்டங்கள் நீதி அமைச்சின் அதிரடி!

145

கனடாவில் கடுமையான குற்றவியல் திருத்த சட்டமூலங்களை அறிமுகப்படுத்திய லிபரல் அரசு.

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசு, கடுமையான குற்றவியல் கொள்கைகளை மையமாகக் கொண்டு மூன்று புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சட்டமூலங்கள்பிணை விதிகளை கடுமையாக்குதல்,
கட்டாய குறைந்தபட்ச மற்றும் தொடர்ச்சியான தண்டனைகள்,
வெறுப்புக் குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான புதிய குற்றங்கள்
என பல முக்கிய மாற்றங்களை உள்ளடக்கியுள்ளன.

இந்த நடவடிக்கை குறித்து நீதி அமைச்சர் சீன் பிரேசர்,
“பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த உண்மையான கவலைகளுக்கே இதுவே பதிலாகும்,”என்று தெரிவித்துள்ளார்.


அதேவேளை, இந்த சட்டமூலங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்றும் அமைதியான போராட்டங்களையும் குற்றமாக்கக்கூடும் என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய சட்டமூலங்கள்
C-9 – வெறுப்புக் குற்றங்களை இலக்காகக் கொண்ட சட்டமூலம்
C-14 – பிணை விதிகளை மேலும் கடுமையாக்கும் சட்டமூலம்
C-16 – பெண்கொலை, வற்புறுத்தல் கட்டுப்பாடு, டீப் ஃபேக் படங்கள் உள்ளிட்ட புதிய குற்றங்களை உள்ளடக்கும் சட்டமூலம்